காலையில் இந்த நீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்

172

சித்த மருத்துவத்தில் பல எண்ணிடலங்காத அற்புதங்கள் இருப்பதுடன், அதில் பயன்படுத்தப்படும் மூலிகைகள் அனைத்தும் நோய்களை தீர்ப்பதிலும், தடுப்பதிலும் அபூர்வ ஆற்றலைக் கொண்டுள்ளது.

ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிறந்த மருத்துவங்கள்
  • துளசி, வில்வம் மற்றும் அருகம்புல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து இரவில் 1 லிட்டர் நீரில் மூடி வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்க வேண்டும்.
  • துளசி கலந்த இந்த மூலிகை நீரை நாம் குடித்து வந்தால், நமது உடலில் உள்ள குடல்கள் மற்றும் சிறுநீர்ப்பையில் இருக்கும் வெப்பம் மற்றும் உடலின் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைவதுடன், மலச்சிக்கல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • வில்வம் கலந்த மூலிகை நீரை குடித்து வந்தால், நமது உடம்பின் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்கள் நம்மை தாக்காமல் தடுப்பதுடன், அந்த நோயினால் பாதிப்படைந்தவர்களுக்கு நோயின் தீவிரம் குறைந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
  • மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி, அதனை 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்கச் செய்கிறது.
  • துளசி இலைகள் மற்றும் சிறிய அளவுள்ள சுக்கு துண்டு, 2 லவங்கம், ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டு வந்தால், நாள்பட்ட தலைவலி கூட நொடியில் சரியாகிவிடும்.
  • வேப்பம் பூவை உலர்த்தி அதை நன்றாக தூள் செய்து, பின் அதை வெந்நீரில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வாயுதொல்லை நீங்குவதுடன் ஆறாத வயிற்றுப் புண்ணும் குணமாகும்.
SHARE