இந்த வருட சீசனுக்கான ஐ.எஸ்.எல். கால்பந்துப் போட்டியின் தமிழ்நாட்டு விளம்பரத் தூதராக தனுஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது பற்றி அவர் கூறும்போது:
நான் நீண்டகாலமாக கால்பந்து ரசிகனாக உள்ளேன். 90 நிமிடங்கள் கிடைக்கும் அருமையான பொழுதுபோக்கு அது. நாள் முழுக்க டிவி முன்பு அமர்ந்திருக்கவேண்டிய அவசியமில்லை.
கடந்த ஆண்டு நடந்த ஐ.எஸ்.எல் போட்டி கால்பந்து விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த வருடம் நிறைய சர்வதேச வீரர்கள் ஆடுகிறார்கள். அதனால் இன்னும் சிறப்பாக அமையப் போகிறது. கால்பந்து விளையாட்டு தொடர்பான படத்தில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன் என்றார். இந்தப் போட்டியில் தனுஷ், சென்னை அணிக்கு ஆதரவளிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
சனிக்கிழமை முதல் 2-வது ஐ.எஸ்.எல். போட்டி ஆரம்பமாகிறது.