காவற்துறை அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்தவர் கைது! அச்சுவேலியில் சம்பவம்

293
யாழ்ப்பாணம் அச்சுவேலி காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி சமன் திலந்த குமாரவுக்கு 6 ஆயிரம் ரூபா இலஞ்சம் கொடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனுமதிப்பத்திரம் இன்றி 6 மாடுகளை லொறியில் ஏற்றிச் சென்ற மூன்று பேர் கடந்த மாதம் 29 ஆம் திகதி அச்சுவேலி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

லொறியுடன் இவர்கள் கடந்த மாதம் 29 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

லொறி உரிமையாளர் லொறியை பெற மனுவொன்றை தாக்கல் செய்திருந்ததுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் எனக் கோரி அச்சுவேலி காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு 6 ஆயிரம் ரூபா இலஞ்சம் கொடுக்க முயற்சித்த போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் உடுவில் சுன்னாகம் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் மல்லாம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் அச்சுவேலி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இது குறித்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE