காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டம் பண்டாகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினரின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை குற்றம் சுமத்தியுள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இந்த விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
சுத்தமான குடிநீரை மக்கள் கோரியதாகவும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கப்பட வேண்டியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் சிலர் காயமடைந்திருந்தனர். சம்பவம் தொடர்பில் சில போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கண்டிக்கப்பட வேண்டியது என நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதேNளை, வெலிவேரிய பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கோரி கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் போராட்டம் நடத்தி;ய பொதுமக்கள் மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலில் சிலர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நாமல் ராஜபக்ஸ எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது