காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மற்றும் அவரது மனைவிக்கு எதிராக முறைப்படு செய்யப்பட்டுள்ளது.
தேசிய காவல்துறைய ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் ஒருவரின் மரணம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்திரா நன்தனி பெரேரா என்பவரினால் சட்டத்தரணி துஸார ரணதுங்கவின் ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமது கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்திரா நன்தனி தெரிவித்துள்ளார்.
நான்கு ஐந்து மாதங்களுக்கு முன்னதாக நன்தனியின் கணவர் குமாரசிறி மதுரப்பெரும உயிரிழந்தார்.
மதுரப்பெரும, காவல்துறை ஊடகப்பேச்சாளரது மனைவியின் மாமா என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரப்பெருமவிற்கு சொந்தமான 55 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் காவல்துறை ஊடகப் பேச்சாளரது மனைவியின் பெயருக்கு எழுதப்பட்டுள்ளது.
மதுரப்பெரும கடுமையான சுகவீனமுற்ற போது அருகாமையில் இருக்கும் பாணந்துறை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லாது தூரத்தில் இருக்கும் நாகொட வைத்தியசாலைக்கு காவல்துறை ஊடகப் பேச்சாளர் அழைத்துச் சென்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் மதுரப்பெரும மரணித்த போது அவரது மனைவிக்கு அறிவிக்காமல் மலர்ச்சாலை ஒன்றுக்கு பூதவுடலை ருவான் குணசேகர எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லயனல் மலர்ச்சாலையில் வைத்து பிரேதப் பரிசோதனைக்கு தேவைப்படக் கூடிய உடல் பாகங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த மரணம் சந்தேகத்திற்கு இடமானது எனவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் மதுரப்பெருமவின் மனைவி காவல்துறை ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.