காவல் துறையினரை கவர்ந்த விஷால்

295

 

சென்னையில் பல இடங்களில் மழையின் பாதிப்பு இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் நடிகர் விஷால் கிருஷ்ணாவுக்கு சென்னை காவல் துறை சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது, மனிதநேயம் உள்ள மாமனிதர் நடிகர் திரு.விஷால் கிருஷ்ணா அவர்கள் அவருடைய பெரும்பங்காக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் துறையினரை கவர்ந்த விஷால் - Cineulagamஉதவிகளையும், வெள்ள நிவாரண பொருட்களையும் வழங்கி இருக்கிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க திறமையுடனும் தன் குடும்பத்தை பாராமலும் இரவு பகலாய் பணிபுரிந்த காவல் துறை நண்பர்களின் சுமார் 1200 குடும்பங்களுக்கு, உதவும் விதத்தில் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

இதற்காக சென்னை காவல் துறை சார்பில் திரு.விஷால் கிருஷ்ணாஅவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் திரையில் மற்றும் கதாநாயகன் அல்ல, நிஜ வாழ்விலும் சிறந்தகதாநாயகன் தான், இதுபோல் அவர்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் என்றனர்.

SHARE