கடந்த 1990 முதல் 2000 வரை இலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களில் தமிழிழத்தின் தலைவர் வேலுபிரபாகரன் பிள்ளை அனைவராலும் தெய்வமாக போற்றப்பட்டார். விடுதலைப்புலிகளின் ஆட்சி காலத்தில் அவரது பிறந்த நாளான நவம்பர் 26ஆம் திகதி இத்தகைய வழிபாடுகள் நடைபெறும்.
இதே போன்று போரினால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினம் கடைபிடிக்கப்படும். 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி அவரை சுட்டுகொன்றதாக சிங்கள ராணுவத்தினர் கூறினர்.
எனினும் அவரது மரணம் கூட அவர் கடவுளாக பார்க்கப்படும் நிலை மாற்றவில்லை. அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் மார்ச் 18ஆம் திகதியை உலக அளவில் உள்ள தமிழர்கள் இனப்படுகொலை நாளாக கடைப்பிடித்து வருகின்றனர்.
அந்நாளில் கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் பிரபாகரனின் பிறந்த நாளின் போது லண்டன் விம்ப்லே மைதானத்தில் ஏராளமான தமிழர்கள் குவிந்தது சிங்களவர்களுக்கு சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மாவீரர்களின் மரணத்தை நினைவுக்கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் நாள், தனி தமிழீழதம் அமைவது குறித்த பேச்சுகளும் அதிகரிக்கின்றன. மக்களின் ஆதரவு காரணமாக பிரபாகரன் இன்றும் மிகவும் புகழ் பெற்றவராக உள்ளார்.