காவிரியில் தண்ணீர் விடுவது தொடர்பாக பெங்களூருவில் நடந்த கலவரத்தை அடுத்து இந்தியராக இருங்கள் என தமிழக கன்னட மக்களுக்கு சேவாக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரராக திகழ்ந்த சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் நிலவும் ஆசாதாரண சூழல் மற்றும் கலவரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை வீடியோ வாயிலாகவும் குறுஞ்செய்தி வாயிலாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் இரண்டு மாநில மக்களையும் கன்னடர்களாகவோ தமிழர்களாகவோ இருக்காதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மாறாக இந்தியராக இருங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுங்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.