காஷ்மீர் நிலவரத்தை கண்காணிக்கவில்லை: முந்தைய கருத்திலிருந்து பின்வாங்கியது ஐ.நா. சபை

275
பான் கி மூன்

பான் கி மூன்

ஜம்மு-காஷ்மீர் நிலவரத்தை தங்களது ராணுவ பார்வையாளர் குழு மூலம் தொடர்ந்து கண் காணித்து வருகிறோம் என்று கூறியிருந்த ஐ.நா. சபை, இப்போது அதிலிருந்து பின்வாங்கி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கடந்த மாதம் என்கவுன்ட்ட ரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை யடுத்து, பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவ தால் அங்கு கடந்த 1 மாதமாக வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூனின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் திங்கள்கிழமை நியூயார்க்கில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாகிஸ்தான் செய்தியாளர் காஷ்மீர் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில், “காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலி யுறுத்தி வருகிறோம். அதேநேரம், காஷ்மீர் நிலவரத்தை அங்குள்ள எங்களது ராணுவ பார்வையாளர் குழுவின் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து பான் கி-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஷ்மீர் விவகாரம் குறித்த சில விளக்கங்களை கூற விரும்பு கிறேன். இந்திய, பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், இந்தியா, பாகிஸ் தானுக்கான ஐ.நா. ராணுவ பார்வையாளர் குழு (யுஎன்எம்ஓஜிஐபி) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அங்கு போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படு கிறதா என்பதை கண்காணிக்கு மாறு அக்குழுவுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடுக்கு அப்பால் நடைபெறும் சம்பவங்களைக் கண்காணிக்கு மாறு உத்தரவிடப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று பாகிஸ் தான் வலியுறுத்தி வருகிறது. ஆனால், காஷ்மீர் உள்நாட்டு விவ காரம் என்றும் இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும் இந்தியா திட்டவட்டமாகக் கூறி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் கருத்தை நீரூபிக்கும் வகையில் ஐ.நா. இவ்வாறு தெரிவித்துள்ளது.

SHARE