காஷ்மீர் மக்களின் கண்களை பறிக்கும் இராணுவம்

250

 

காஷ்மீர் மக்களின் கண்களை பறிக்கும் இராணுவம்

13620148_10154230669274336_6780753689704316696_n

14 வயது இன்ஷா மாலிக் ஸ்ரீநகர் மஹாராஜா ஹரிசிங் மருத்துவமனை ஐசியூ வில் நினைவின்றி கிடக்கிறார். அவரது இரு கண்களையும் காஷ்மீர் போலீசார் இந்த ஏர் கன் சிறு குண்டுகளால் துளைத்தெடுத்துவிட்டனர். இனி என்ன செய்தாலும் கண்பார்வையை மீட்கவே முடியாது. அப்பெண்குழந்தையின் வலது கண் சிதைக்கப்பட்டுள்ளது; இடது கண்ணோ கிழிக்கப்பட்டுள்ளது. இனி அவள் வாழ்நாள் முழுவதும் பார்வையில்லாமல் கழிக்க வேண்டும். ஜூலை 8 புர்ஹான் முசாஃபர் வானி படுகொலைக்குப் பின்னர் நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் மேல் காஷ்மீர் போலீசும் இந்திய துணைஇராணுவமும் கட்டவிழ்த்து விட்ட பயங்கரத்தால் பாதிக்கப்பட்ட் ஆயிரக்கணக்கானவர்களில் இவளும் ஒருத்தி. சோஃபியான் மாவட்டத்தின் சீடோ கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பில் முதல் மாணவியான இக்குழந்தை செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிற்குள் அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது போலீஸ் கண்மூடித்தனமாக பெல்லட் கண்ணால் சுட்டதில் சமயலறைக்குள் இருந்த அப்பெண்ணின் கண்பார்வை பறிக்கப்பட்டுள்ளது.

SHARE