சிறுநீரில் உள்ள கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது.
சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்.
மேலும் கிட்னி கற்களை உருவாக்க காரணமாக உள்ள சில முக்கிய உணவுகளை பற்றியும் அதனை தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதைப் பற்றியும் பார்ப்போம்.
பால் பொருட்கள்
பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ், வெண்ணெய், யோகர்ட் போன்றவற்ற்றையும் அதிகம் சாப்பிட கூடாது. மேலும், ஆடை நீக்கப்பட்ட பாலை பருகுவது நல்லது.
முளைக்கீரை
கீரை உடலுக்கு நல்லது தான். ஆனால் முளைக்கீரையை அதிகமாக சாப்பிட்டால் கால்சியம் ஆக்சலேட் உருவாகி கிட்னியில் கல் ஏற்படும். எனவே இவற்றுடன் குறைந்த அளவு கொழுப்பு உள்ள சீஸ் சேர்த்து சாப்பிட்டால் நல்லது.
கால்சியம் நிறைந்த உணவுகள்
பால், தயிர், மீன், அத்தி பழத்தில், காராமணி போன்றவற்றில் அதிகம் கால்சியம் உள்ளது. பாஸ்பரஸ் நிறைந்த உணவையும் அதிகம் சாப்பிட கூடாது. இவை கால்சியமுடன் சேர்ந்து வேதி வினை புரிந்து பாதிப்பை சிறுநீரகத்திற்கு தரும்.
ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சை
ஆரஞ்ச், எலுமிச்சை போன்றவற்றை அதிகமாக வைட்டமின் சி இருப்பதால் இவை உடலில் ஆக்சலேட்டை உற்பத்தி செய்து கிட்டினியில் கற்களை உருவாக்கும். எனவெ இவற்றை குறைவாக சப்பிடுவது மிகவும் நல்லது.
விலங்குகளின் கல்லீரல்
விலங்குகளின் கல்லீரலை அதிக அளவில் சாப்பிட்டால் அவை கிட்டினியை பாதிக்க செய்யும். குறிப்பாக கோழியின் கல்லீரல், மாட்டின் கல்லீரல் போன்றவை இந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
சோயா
சோயாவை அதிக அளவில் உணவில் சேர்த்து கொண்டால் பின்விளைவுகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக சோயா பால், சோயா வெண்ணெய், சோயா சாஸ் ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், இறைச்சிகள், தின்பண்டங்கள் போன்றவற்றை சாப்பிடுவதால் கிட்னியின் ஆரோக்கியம் மிகவும் சீர்கேடு அடையும். எனவே, பதப்படுத்தபட்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
பெரிஸ்க்கள்
பழங்கள் உடலுக்கு நல்லது தான். கிரன்பெரில், ராஸ்பெரிஸ், ஆரஞ்சு போன்றவற்றை குறைவாக எடுத்து கொள்ளவும். இல்லையென்றால் கிட்டினியை கற்கள் உருவாக்கி விடும்.