கிட்னியை எளிமையாக சுத்தம் செய்ய

178

வோக்கோசில் வைட்டமின்கள் A, B, C மற்றும் D மற்றும் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், சல்பர் நார்ப்பொருள், ஃபிளவனாய்டுகள் போன்ற ஊட்டசத்துகள் உள்ளன.

மேலும் இந்த மூலிகை பல வழிகளில் உடலுக்கு உதவுகிறது. மேலும் இதனை கொண்டு எப்படி கிட்னியை எளிமையாக எப்படி சுத்தம் செய்ய முடியும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • வோக்கோசு- 1 தேக்கரண்டி
  • தண்ணீர்- 1 கப்
செய்முறை
  • முதலில் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும் .பின் தண்ணீர் கொதிக்கும்போது ஒரு தேக்கரண்டி ​வோக்கோசை சேர்க்கவும்.
  • மேலும் 5 நிமிடங்களுக்கு இதைக் கொதிக்க விடவும். பின்பு வோக்கோசின் துணுக்குகளை நீக்க அதை நன்கு வடிகட்டி சில நிமிடங்கள் ஆறவிடவும்.
  • பின்பு இதில் சர்க்கரை அல்லது சுவையூட்டிகளைச் சேர்க்கலாம். இதனை ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் வீதம் வாரத்தில் 4 நாட்களுக்கு குடித்து வந்தால் உங்கள் சிறுநீரகங்களை எளிமையாக சுத்தம் செய்து விடலாம்.

வோக்கோசின் நன்மைகள்
  • வோக்கோசின் ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் என்பதால் இவை உங்கள் உறுப்புகளை சுத்தப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது.
  • செரிமானம் மற்றும் செரிமான அமைப்புகளின் பொதுவான செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
  • உடல் எடையை குறைக்க இது ஒரு சிறந்த மூலிகை ஆகும். எனவே இதனை தினமும் அருந்தி வருவது மிகவும் நல்லது.
  • நோய் எதிர்ப்பு அதிகரிக்கவும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸை எதிர்க்கிறது. மேலும் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது.
  • இவை உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது
SHARE