கிணறு கட்டிக்கொண்டிருந்த நிலையில் குறித்த கிணற்றுக்குள் தவறி விழுந்து மூதாட்டியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சி பாலாகடைச் சந்தி புதுமுறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கிணறு கட்டிக்கொண்டிருந்த போது கிணற்றில் தவறுண்டு விழுந்து கிணறு கட்டுவதற்கு பயன்படுத்திய சாரப் பலகையுடன் மோதியே குறித்த மூதாட்டி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 76 வயதுடைய சண்முகநாதன் சிவஞானம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.