திருகோணமலை ஆலங்கேணி பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி 1500 மில்லி லீற்றர் மதுபானத்தினை கொண்டு சென்ற நபருக்கு 12,000 தண்டப்பணமும் அதனை செலுத்தாத பட்சத்தில் ஒரு மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா நேற்று (20) பிறப்பித்துள்ளார்.
கிண்ணியா ஆலயங்கேணி பகுதியிலிருந்து சட்டவிரோதமாக மதுபானத்தினை நடுஊற்றுப் பகுதிக்குச் கொண்டு சென்ற 54 வயதுடைய குறித்த நபரை கிண்ணியா பொலிஸார் வியாழக்கிழமை (19) இரவு கைது செய்து நேற்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
இதன்போதே திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா குறித்த நபருக்கு இந்த தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.