கின்னஸ் சாதனை படைத்த அகடம் திரைப்படம்

170

கின்னஸ் உலக சாதனைத் திரைப்படம் ‘அகடம்’ உலகமெங்கும் அடுத்த மாதம் நவம்பர் 15-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்திய சினிமா நூற்றாண்டு காணும் இந்த வேளையில் ஓரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அகடம்’ வெளியாவது மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.

எண்ணற்ற உலக சினிமா விரும்பிகளின் கவனத்தைத் திருப்பிய இப்படம் வெளியாவதில் அகடம் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

ஒரே ஷாட்

ஒரே ஷாட்

அகடம் முழு திரைப்படமும் தொடர்ந்து 2 மணிநேரம் 3 நிமிடங்கள் 30 வினாடிகள் எவ்வித கட், ரீடேக் எதுவும் இல்லாமல் படமாக்கப்பட்டதுதான்.

திகில் இரவில்

திகில் இரவில்

சமூக சிந்தனையுள்ள இப்படம் முழுவதும் ஒரே இடத்தில் திகிலூட்டும் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகளால் யு/எ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

புதுவை முதல்வர் ரங்கசாமி

புதுவை முதல்வர் ரங்கசாமி

சமீபத்தில், இளம் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் ‘அசிஸ்ட் வேர்ல்ட் ரிகார்ட்ஸ் எனும் பிரபலமான நிறுவனம் அதன் ஆண்டுவிழாவில் அகடம் படக்குழுவினரை சாதனைச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவப்படுத்தியது. மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் திரு. N. ரங்கசாமி அவர்கள் ‘அகடம்’ பட சாதனையாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கினார்.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

பிரசித்திபெற்ற ‘கின்னஸ் உலக சாதனை’ நிறுவனம் ஏற்கனவே இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பெருமைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கன்னடம், இந்தியில்

கன்னடம், இந்தியில்

முன்னணி நடிகர்களை வைத்து தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உலக சாதனைப்படத்தை கன்னடம் மற்றும் இந்தி பட உலகிற்கும் கொண்டுசெல்லும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

நவம்பர் 15ல் ரிலீஸ்

நவம்பர் 15ல் ரிலீஸ்

இருக்கை நுனியில் அமரவைக்கும் விறுவிறுப்பான இந்த திகில் திரைப்படம் நவம்பர் 15 முதல் தமிழ்த்திரைப்பட ரசிகர்களையும் திரையுலகினர்களையும் அசரவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள்

நடிகர்கள்

‘லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் மற்றும் N. செல்வகுமார் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் பாஸ்கர், சீனு ஐயர், தமிழ், கலைசேகரன், சரவண பாலாஜி, ஸ்ரீ ப்ரியங்கா, அனிஷா மற்றும் குழந்தை நட்சத்திரம் அஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்பக் கலைஞர்கள்

தொழில் நுட்பக் கலைஞர்கள்

இந்த படத்தினை எழுதி இயக்கியுள்ளார் முகமது இசாக், E.J. நவ்ஷாத் கேமராவை படம் முழுக்க கைகளில் சுமந்தபடியே மிகத்திறமையாகப் படம்பிடித்துள்ளார். பாஸ்கர் பின்னணி இசையமைத்துள்ளார். மக்கள் தொடர்பு: S செல்வரகு, இணைதயாரிப்பு: N. செல்வகுமார், தயாரிப்பு: M.ரசியாபி முகம்மது மற்றும் முகமது இசாக்

SHARE