கிம் கர்தாஷியன் ஹேப்பி. கொள்ளை போன வைர மோதிரம் சிக்கியது

241

625-500-560-350-160-300-053-800-748-160-70-5

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பிரபல மொடல் கிம் கர்தாஷியனிடம் கொள்ளையடிக்கப்பட்ட வைர மோதிரம் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல மொடல் அழகியான கிம் கர்தாஷியான் பாரீஸில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தபோது முகமூடி கொள்ளையர்கள் இவரது வைர மோதிரம் உள்ளிட்ட சுமார் 10 மில்லியன் யூரோ மதிப்பிலான நகைகளை அள்ளிச் சென்றனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் பாரிஸ் நகர போலிஸார் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் மொடல் கிம் தங்கியிருந்த ஹொட்டல் அருகே இருந்து இவரது வைர மோதிரம் வழிபோக்கர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மோதிரத்தில் கொள்ளையர்களின் விரலடையாளம் அல்லது டி.என்.ஏ ஏதும் உள்ளதா என்று பொலிஸார் சோதனையிட்டு வருகின்றனர்.

மொடல் கிம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் பாரிஸ் பொலிஸார் கடும் நெருக்கடிக்கடிக்கு உள்ளாகியிருந்தனர்.

கடந்த ஞாயிறு அன்று பாரீஸில் உள்ள ஆடம்பரமான ஹொட்டல் ஒன்றில் கிம் கர்தாஷியான் தங்கியிருந்தபோது கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் அந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கிம் கர்தாஷியானின் அறைக்குள் நுழைந்த 5 முகமூடி அணிந்த நபர்கள் உடனடியாக கிம்மிடம் இருந்த கைப்பேசியை பறித்துள்ளனர்.

அப்போது, நபர்களில் ஒருவன் அச்சத்தில் உறைந்து நின்ற கிம்மின் கால்களை பிடித்துள்ளான். உடனடியாக பிளாஸ்ட்டிக் பட்டையை எடுத்த அந்த நபர் கிம்மின் கால்களை கட்டி குளியல் அறையில் தள்ளியுள்ளான்.

அப்போது, என்னை எதுவும் செய்து விடாதீர்கள். இங்கிருந்து என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். என கண்ணீர் விட்டு கெஞ்சியுள்ளார்.

இதனை கேட்ட நபர் ஒருவர் ‘மோதிரம், மோதிரம்’ எனக் கேட்டு மிரட்டியுள்ளான்.

கிம் கர்தாஷியானின் கணவரான கென்யா வெஸ்ட் அன்பளிப்பாக அளித்திருந்த அந்த வைர மோதிரத்தை கொள்ளையர்கள் பறித்துள்ளனர்.

பின்னர், அறையில் இருந்த சுமார் 10 மில்லியன் யூரோ மதிப்பிலான நகைகளை அள்ளிய முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

SHARE