கிராம அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் உத்தியோகத்தர்களுடனான விசேட ஒன்று கூடல் – வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்…

340

 

கிராம அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் உத்தியோகத்தர்களுடனான விசேட ஒன்று கூடல் – வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்….
unnamed (1) unnamed (2) unnamed
வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனைத்து மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட ஒன்றுகூடல் 27-02-2015 வெள்ளிக்கிழமை நண்பகல் 1:30 அளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் மாகாண பணிப்பாளர் கிராம அபிவிருத்தி திரு.பெலிசியன் அவர்களும் 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்,
இவ் விசேட கூட்டத்தில் வடக்கு மாகாணம் முழுவதும் உள்ள கிராம மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் நிலைமைகள் தொடர்பிலும், அங்கு அரசியல் ரீதியாக காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டதோடு, இனி வரும் காலங்களில் சகல சங்கங்களும் அரசியல் தலையீடுகள் எதுவும் இன்றி கிராமங்களை வளர்க்கும் நோக்கோடு செயற்ப்பட சகல உத்தியோகத்தர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சங்கங்களில் நிதி மோசடிகள் இடம்பெற்றிருப்பின் அவற்றை உடன் விசாரணை செய்து, மக்களுக்கு தரமான கிராம அபிவிருத்திகளை வழங்க வேண்டும் என்றும், ஒவ்வொரு சங்கங்களையும் புதுப்பிக்கும் நடவடிக்கை முடிவடைந்த போதும் இன்னமும் புதுப்பிக்காமல் இருக்கும் சங்கங்கள் மட்டில் அக்கறை எடுத்து அவற்றையும் சரியான நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர உடன் நடவடிக்கை எடுக்குமாறும், சங்கங்களிநூடே சுழற்ச்சி முறையிலான கடன் திட்டங்களை சரியான முறையிலே மேற்கொண்டு ஒவ்வொரு சங்கங்களையும்  வளர்க்கவேண்டிய தேவை இருப்பதனால் சகல உத்தியோகத்தர்களும் தமது கடமைகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்..
அத்தோடு சென்ற ஆண்டு மிகவும்  திறமையான முறையிலே தனது சேவையை வடக்கு மாகாணம் முழுவதும் சிறப்பாக செய்து முடித்த திணைக்களமாக திகழ்வதால் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் தனது விசேட பாராட்டுக்களை தெரிவித்ததோடு, இந்த ஆண்டும் இன்னும் சிறப்பாக தன்னுடன் இணைந்து சேவை செய்ய தனக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்
SHARE