கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர் சந்தோஷ் நாராயணனின் புகைப்படத்தைக் கண்டு பாராட்டியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கும் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த சந்தோஷ் நாராயணன். இவர் சச்சினின் 100 செஞ்சுரிகளைக் கொண்டு புகைப்படம் ஒன்றை உருவாக்கினார்.
அந்த புகைப்படத்தைக் கண்ட அவர் வெகுவாக சந்தோஷ் நாரய்ணனை பாராட்டியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த ஓவியம் குறித்து அவர் கூறுகையில், அதை நான் பல நாட்களுக்கு முன்னாடி வரைந்தேன். அவருடைய சதங்களை மையமாக வைத்து, typography potrait-ஆல் வரையப்பட்ட புகைப்படம் தான் அது, சச்சின் அடிச்ச ஒவ்வொரு சதங்கள் பற்றியும் அதில் இருக்கும்.
அப்போது ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிகையோட ஆசிரியர் சச்சினை பார்க்க செல்வதாகவும், உங்களுடைய அந்த புகைப்படத்தை தான் அவருக்கு பரிசாக கொடுக்கப்போகிறேன் என்று கூறினார்.
அந்த புகைப்படத்தைக் கண்ட சச்சின் அதில் இருக்கும் நுணுக்கங்களைக் கண்டு வெகுவாக பாராட்டியதாக அவர் கூறினார். அந்த சமயம் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று தெரிவித்தார்.