கிரிக்கெட் போர் ஆஷஸ் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு

270

625-500-560-350-160-300-053-800-748-160-70-9

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரிற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கின்றது.

இதன்படி, அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஷஸ் கிண்ண தொடரின் போட்டிகள் நடைபெறவுள்ளது.

தொடரின் முதல் போட்டி, பிரிஸ்பேனில் நவம்பர் 23ஆம் திகதியும், 2வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு போட்டியாக அடிலெய்டில் டிசம்பர் 2ஆம் திகதியும், 3வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் டிசம்பர் 14ஆம் திகதியும், 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26ஆம் திகதியும், 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் 2018ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் கிண்ண தொடரில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவை சாய்த்து தொடரை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் கிண்ண தொடரானது கிரிக்கெட் போர் என வர்ணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE