அமெரிக்காவின் அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே இந்த வாரத்திற்கான நிஜத்தின் தேடல் நிகழ்ச்சிஅமைந்துள்ளது.
சில தினங்களிற்கு முன்னர் இடம்பெற்ற டெமொகிரட்டிக் மாநாடு படுபாதள பிரச்சினையைச் சந்திக்க இருந்தது. கிளாரிக்கு ஆதரவாகவும், பேர்ணி சாண்டஸிற்கு எதிராகவும் கட்சியின் தலைமைப்பீடம் செயற்பட்டதை ஆதரப்படுத்தும் 19,000 மின்னஞ்சல்கள் கசியவிடப்பட்டன.
இதன் பின்னணியில் ரஸ்யா இருந்தது என்பது தொடர்பான விவகாரங்களையும், டொமோகிரட்டிக் கட்சியே உடைந்து பல துண்டுகளாக சிதற இருந்த நிலையில் மிசேல் ஒபாமா ஒப்பேற்றிய திறமையான இராஜதந்திரத்தையும் இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா விளக்கியுள்ளார்.