கிளிநொச்சியில் நெல் ஆராய்ச்சி நிலையமும்,விதை நடுகை பொருள் அபிவிருத்தி நிலையமும் இணைந்து வயல் விழாவினை ஏற்பாடு செய்து, நடாத்தியுள்ளன. பரந்தனில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
பொங்கல் நிகழ்வினை தொடர்ந்தும் அறுவடை நிகழ்வும் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது. குறித்த நெல் ஆராய்ச்சி நிலையத்தில் 50 மேற்பட்ட நெல் இனங்கள்
ஆராய்ச்சி செய்யப்படுவதோடு, பத்து நெல் இனங்கள் உற்பத்தி செய்யப்பட்டும் வருகிறது.
அத்தோடு பிரதேசத்தின் கால நிலைக்கு ஏற்ற வகையிலும் இனங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படுவதாகவும் நெல் ஆராய்ச்சி நிலையத்தினரால் தெரிவிக்கப்படுகிறது.
பரந்தன் விதை நெல் நடுகைபொருட்கள் அபிவிருத்தி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ச.சதீஸ்வரன், தலைமையில் இடம்பெற்ற இன்றைய வயல் விழா நிகழ்வில் பத்லகொட நெல் ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி கீர்த்திசேன, இரனைமடு மறு பயிர்கள் ஆராச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி அரசகேசரி, மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.