கிளிநொச்சியில் உழவு இயந்திரம் கிணற்றுக்குள்

272

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றினுள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (திங்கட்கிழ்மை) பிற்பகல், கிணற்றினை சுற்றி உழவு செய்து கொண்டிருந்த சமயம் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் கிணற்றினுள் விழுந்துள்ளது. இதன்போது, சாரதி சிறு காயங்களிற்கு உள்ளான நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

சுமார் 35 அடி ஆழமான கிணற்றில் நீர் அதிகமாக காணப்பட்டுள்ளதனால், கிராம மக்களின் ஒத்துளைப்புடன கிணற்றில் இருந்த நீர் அகற்றப்பட்டதன் பின்னர், உழவு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது.kelekele01kele02kele03kele04

SHARE