கிளிநொச்சியில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

272
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் வைத்தே சந்தேக நபரை நேற்று இரவு மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த நபரை, மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை பகுதியில் வைத்து போது அவரை கைது செய்ய முற்பட்டனர்.

இதன்போது, குறித்த சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கிளிநொச்சிப் பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர் .

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மீட்கப்பட்ட இரு கேரளா கஞ்சாப்பொதிகளும் 4 கிலோ கிரேம் எடை கொண்டது என மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தின் விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளதாக உப பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.யூ.ஹேரத் தெரிவித்துள்ளார்.

SHARE