கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் இரவு வேளையில் காணி ஒன்றுக்குள் புகுந்து வீட்டில் வளர்த்த கோழி ஒன்றை திருடிய குற்றத்திற்காக இராணுவ சிப்பாய் ஒருவர் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 3000 ரூபாய் இழப்பீடு செலுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எதிராளியான குறித்த இராணுவ சிப்பாய் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தநிலையில், முறைப்பாட்டாளர் குற்றத்திற்கு இழப்பீடு பெற்றுக்கொள்ள இணக்கம் தெரிவித்ததை அடுத்து மாவட்ட நீதிவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.