கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தை முன்னிட்டு 29 பயனாளிகளுக்கு கால்நடைகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 29 மக்களுக்கு கால்நடைகளை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வழங்கி வைத்துள்ளார்.
கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான உதவிகளை மேற்கொண்டு வருவதாகவும் , பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவே மக்களுக்கு கால்நடைகள் வழங்கியதாக கூறியுள்ளார்.
மேலும் வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக காணப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மற்றும் ஆனையிறவு உப்பளம் போன்ற இடங்கள் யுத்தத்தினால் அழிக்கப்பட்டுள்ளது .
இதனால் வடபகுதி மக்களுக்கான வேலை வாய்ப்புக்கள் இல்லாது போய்விட்டது. இதனை நிவர்த்தி செய்ய அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மற்றும் பலர் கலந்து கொண்டனர்.