கிளிநொச்சியில் புத்தர் சிலையை உடைத்தவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமேன ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மதப் பிரிவான ஹெல பொது சவிய அமைப்பு கோரியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அந்த அமைப்பு நேற்று அனுப்பி வைத்த கடிதத்தில் இந்தவிடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புதகல ஜினவன்ச தேரரின் கையொப்பத்துடன் கூடிய இந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
இலங்கை இராணுவத்தினால் கிளிநொச்சி, கனகராயன்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலை ஒரு தரப்பினர் உடைத்துள்ளனர்.
இவ்வாறு புத்தர் சிலையை உடைத்தவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிப் பீடம் ஏற்றுவதற்கு உதவிய போது இவ்வாறான நிலைமை ஏற்படும் என கருதவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் பௌத்த மதத்திற்கு எதிரான சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
போரின் பின்னர் வடக்கு கிழக்கில் முஸ்லிம், கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களும் இந்து கோயில்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான ஓர் நிலையில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதனை அனுமதிக்க முடியாது என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.