கிளிநொச்சியில் பெய்த கனமழை, வெள்ளப்பெருக்குக் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

178

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கனமழை, வெள்ளப்பெருக்குக் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்கள் அழிவடைந்து பல குடும்பங்கள் செய்வதறியாது தவிப்பதாகக் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்விடயம் குறித்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றார்கள்.

இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக மக்கள் வாழ்வாதாரத்திற்காக வளர்த்த பெருமளவான கோழிகள் இறந்துள்ளதுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமற்போயுள்ளன.

அத்துடன், வாழ்வாதாரத்திற்காக மக்களால் வளர்க்கப்பட்ட ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் இறந்துள்ள அதேவேளை நோய்வாய்ப்பட்டும் காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான வாழ்வாதாரமான விவசாயமும் வெள்ளப்பெருக்குக் காரணமாக முற்றுமுழுதாக அழிவடைந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் சில நிறுவனங்களால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவியான கோழி வளர்ப்புக்கான உதவியை வழங்கியிருந்தார்கள்.

அவற்றை நம்பி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்த மக்களது வாழ்வாதாரமே தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களில் பலர் சுயமாகக் கடன்களைப் பெற்றும் கோழி, ஆடு, மாடு வளர்ப்புப் போன்ற வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், தமது வாழ்வாதாரத்தை இழந்த பெருமளவான குடும்பங்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இவ்விடயம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, மாவட்டச் செயலகத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களது முழுமையான விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.1280.160.95 (1) 625.0.560.350.160.300.053.800.1280.160.95 (2) 625.0.560.350.160.300.053.800.1280.160.95 (3) 625.0.560.350.160.300.053.800.1280.160.95 (4) 625.0.560.350.160.300.053.800.1280.160.95

SHARE