கிளிநொச்சியில் பொருத்தமற்ற இடத்தில் அமைக்கப்படும் பாலம்! பொது மக்கள் கடும் எதிர்ப்பு

248

கிளிநொச்சி பெரிய பரந்தன் தாரணி குடியிருப்பு பகுதியில் இரணைமடு அபிவிருத்தியின் இபாட் திட்டத்தின் கீழ் பொருத்தமற்ற இடத்தில் பாலம் அமைக்கப்படுவதற்கு பிரதேச மக்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது,

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

பெரியபரந்தன் தாரணிகுடியிருப்பு எல்பி 2 நீா்ப்பாசன வாய்காலில் தாரணி முன்பள்ளிக்கு முன்பாக அமைக்கப்படும் பாலம் தொடா்பிலேயே பொது மக்களுக்கும் நீா்பாசன திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையே முரன்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

மேற்குறித்த வாய்காலில் தாரணி முன்பள்ளிக்கு முன்பாக 1990 ஆண்டு முதல் பாலம் ஒன்று காணப்பட்டுள்ளது. இதனையே முன் பள்ளி சிறார்கள் முதல் பொது மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் அந்த பாலம் தற்போது முற்றாக உடைக்கப்பட்டு இபாட் திட்டத்தின் கீழ் புதிய பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிய பாலமும் பழைய பாலம் அமைந்திருந்த இடத்திலேயே அமைக்கப்படும் என தீா்மானிக்கப்பட்டு அதற்கான அத்திபாரமும் வெட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சில தனிநபா்களின் செல்வாக்கின் அடிப்படையில் பாலம் இருந்த பாதையை விட்டு அதிலிருந்து பத்து மீற்றா் சற்று அருகில், முன்பள்ளியின் சுற்று மதில் அமைக்கப்பட்டுள்ள பொருத்தமற்ற இடத்தில் பாலத்தை அமைப்பதற்கு அதிகாரிகள் தீா்மானித்துள்ள நிலையிலேயே பொது மக்கள் தங்களின் கடும் எதிர்பினை தெரிவித்துள்ளனா்.

பழைய பாலம் அமைந்துள்ள இடம் பொருத்தமானது. அதனை பயன்படுத்தியே இவ்வளவு காலமும் முன்பள்ளி சிறார்களும், பொது மக்களும் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனா். எனவே குறித்த இடத்திலேயே பாலத்தை அமைத்து தருமாறும் பிரதேச மக்கள் கோருக்கின்றனா்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

SHARE