கிளிநொச்சியில் மக்கள் திரண்டு முள்ளிவாய்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு கண்ணீர் மல்க வணக்கம்
இன்று கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கரைச்சி பிரதேசசபை உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் ஆதரவுடன் கரைச்;சி பிரதேசசபையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு பெருமளவு மக்கள் திரண்டு வந்து வணக்கம் செலுத்தினர் எம்முடன்
கரைச்சி பிரதேச சபை உபதவிசாளர் உறுப்பினர்கள் வர்த்தகர்கள் மாணவர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி நிர்வாகிகள் என பெருமளவானோர் திரண்டு வணக்கம் செலுத்தினர்.
இன்று மாலை 3மணிக்க ஆரம்பித்த நிகழ்வுகளில் முன்னதாக பொதுச்சுடரை முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களின் உறவுகள் ஏற்றியதை தொடர்ந்து சம நேரத்தில் வந்திருந்தவர்கள் சுடர்களை ஏற்றினர்.தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து இந்து மற்றும் கிறிஸ்த்துவ மத பிரார்த்தனைகள் இடம்பெற்றன.இந்து மதப்பிரார்த்தனையை ஒய்வுபெற்ற ஆசிரியையும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகருமான திருமதி.செல்வராணி நடத்தினார்.கிறிஸ்த்துவ மதப்பிரார்த்தனையை கிளிநொச்சி திரேசம்மாள்ஆலய பங்குத்தந்தை நிகழ்த்தினார்.
பொலிஸ் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்தபோதும் பெருளவான மக்கள் உணர்வுபூர்வமாக வந்து கலந்துகொண்டிருந்தனர்.