கிளிநொச்சியில் விபத்து: சுற்றுலாவிற்கு வந்த முதியவர் ஒருவர் பலி

239

கிளிநொச்சி கரடிப்போக்கில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மின்சார சபை வாகனமும் தென்னிலங்கையில் இருந்து சுற்றுலாவுக்கு வந்த வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததுடன் பிக்கு உட்பட ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தோர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE