கிளிநொச்சியில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக வெள்ளத்துடன் வந்த முதலை பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் பிடிக்கப்பட்ட இந்த முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த முதலை திருவையாறு பகுதியில் மேய்ச்சலில் நின்ற பசு கன்று ஒன்றினை வேட்டையாடி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று மாலை குறித்த முதலை திருவையாறு பிரதேசத்தில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. குறித்த முதலையை பிரதேச மக்கள் பிடித்து வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த மாதம் ஆனந்தபுரம் பகுதியில் இவ்வாறு குடியிருப்புக்குள் புகுந்த முதலை, வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை பிடிக்க முற்பட்டது.
பாரிய முயற்சியில் சிறுமி பலத்த காயங்களுடன் காப்பாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.