இரணைமடுக்குள அனைக்கட்டின் கீழ்புற வேலைத்திட்டங்களை தொடர்வதற்கு வெடிக்கும் நிலையில் உள்ள RGP செல் குண்டுகள் பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குள வேலையில் ஈடுபட்டுள்ள சிங்கள தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி இரணைமடு குளக்கட்டுமான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து ஒருவருடம் பூர்த்தியாக இன்னும் இரு நாட்கள் இருக்கின்றன.
இந்நிலையில் அனைக்கட்டின் கீழ்புற, மேற்புற சாய்வை புனரமைக்கும் வேலைத்திட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இரண்டாம் கலிங்கு பகுதிகளில் செல்குண்டுகள் வெடிக்கும் நிலையில் இருப்பதாகவும் தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.