கிளிநொச்சியில் வெளியான வாக்களிப்பு வீதமுடிவுகளின்படி 72 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

343

 

கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதிவாக்குப் பெட்டி இன்று மாலை 6.45 மணியளவில் வாக்கெண்ணும் நிலையத்திற்கு வந்துசேர்ந்ததைத் தொடர்ந்து வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் கீழுள்ள கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களிலிருந்து அனைத்து வாக்குப் பெட்டிகளும் கிளிநொச்சி மாவட்ட வாக்கெண்ணும் நிலையத்திற்கு வந்துசேர்துள்ள நிலையில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரிப் பிரதேசத்திலுள்ள நாச்சிக்குடா வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்குப்பெட்டிகளுடன் இறுதியாக இன்று மாலை 6.45 மணியளவில் வந்துசேர்ந்துள்ளதனைத் தொடர்ந்து வாக்கெண்ணும் பணிகளிள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிளிநொச்சியில் வெளியான வாக்களிப்பு வீதமுடிவுகளின்படி 72 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE