கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் ஐ.நாவை நோக்கிய நீதிக்கான நடைபயணம் இன்று ஆரம்பமானது.

186

கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் ஐ.நாவை நோக்கிய நீதிக்கான நடைபயணம் இன்று (22) காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது.

உமையாள்புரம் ஆலயமுன்றில் இருந்து ஆரம்பமான பேரணி கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களையும் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

இராணுவ பலத்துடன் திட்டமிட்ட வகையில் தமிழர் தாயகப்பகுதிகளில் பௌத்த விகாரைகளையும் புத்த சிலைகளையும் நிறுவிய சிங்கள மயமாக்கலை எதிர்த்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், உரிமைகளை வென்றெடுப்பதற்கானதும், காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும், ஐ.நா நோக்கிய நீதிக்கான நடைபயணத்தை இன்று ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

கிளிநொச்சி மாவட்டத்தின் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் மற்றும் பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்த நடைபவனியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவமோகன், மற்றும் மாகாண சபை உறுப்பினர், அரசியல் பிரதிநிதிகள், தமிழ்த் தேசிய முன்னணியைச்சேர்ந்த செ.கஜேந்திரன், எனப்பலர் கலந்து கொண்டனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)

SHARE