கிளிநொச்சி செல்வநகரில் நீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

88

 

செல்வநகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குறித்த சிறுமி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விசாரணை
ஒரு வயதும் 3 மாதமும் நிறைவடைந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE