கிளிநொச்சி சந்தைத்தொகுதி பற்றி எரிந்தது அனைவருக்கும் நினைவிருக்கும் இதில் பல குடும்பங்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது அது அவர்களது வாழ்வாதாரத்தினைபாதித்தது என்பதும் அறிந்த விடயமே.
தீ எனும் ரீதியில் அண்மையில் கொஸ்கமுவ சாலாவ விபத்திற்கு பிறகு பொது மக்களுக்கு பாரியதொரு இழப்பு ஏற்பட்ட விபத்தும் கிளிநொச்சி விபத்தே. இதற்கு காரணம் அரசும் இராணுவமுமே என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கருத்துகள் கூறப்படுகின்றது.
சாலாவ விபத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணம் அதி விரைவில் கொடுக்கப்பட்டது. சுயதொழில் வேலைவாய்ப்புகள் தொடக்கம் தலா குடும்பங்களுக்கு 50000 ஆயிரம் ரூபா வரையில் கொடுப்பனவுகள் கொடுக்கின்றது.
அதே போல் மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்திற்கும் பல்வேறு வகையானநிவாரணங்கள் வழங்கப்படுகின்றது. வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள்அமைத்தும் கொடுக்கப்பட்டது.
அதே நிலைமை வடக்கிற்கு கிடைக்கப்பெறுகின்றதா? என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும். எவ்வகையிலும் வடக்கிற்கு தற்போதைய அரசு பாரபட்சம்காட்டிக்கொண்டு வருவது வெளிப்படையாக தெரிந்த விடயமே.
இங்கு ஒருவருக்கு கிடைக்கின்றது ஒருவருக்கு கிடைக்கவில்லை என்றஎண்ணத்திற்காக இவை எடுத்துக்காட்டப்படவில்லை. இடம் பெற்று வரும் யதார்த்தநிலையே கூறப்படுகின்றது.
கிளிநொச்சி தனி மாவட்டமாக பிரகடனப்படுத்தியது மட்டுமே ஆனால் அபிவிருத்திஎனும் ரீதியில் அங்கு எந்தவொரு முன்னேற்றமும் செய்யப்படவில்லை.
கிளிசொச்சியில் பிரதேச சபை மட்டுமே இன்று வரைகாணப்பட்டு வருகின்றது, அதுநகரசபையாக மாற்றப்படவேண்டிய கட்டாயம் உள்ளது அவ்வாறு மாற்றப்பட்டால்மட்டுமே தீயணைப்பு படை என்பது நிலைகொண்டிருக்க முடியும்.
இராணுவத்தை பலப்படுத்தி அதிகளவான எண்ணிக்கையில் அவர்களைநிலைகொள்ளவைக்க வேண்டிய அவசியமும் கட்டாய நிலையும் காணப்படும் போதுஅங்கு அவசர, அவசிய தேவை நிலையங்கள் போன்றவை இன்றளவும்அமைக்கப்படவில்லை.
இதேவேளை கிளிநொச்சியில் ஏற்பட்ட தீவிபத்தில் 125 கடைகள் தேசமடைந்தது, இங்கு தீ பரவத்தொடங்கி சுமார் 1 மணிநேரத்திற்கு பின்னரே தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திக்கு வந்துள்ளது.
125 கடைகள் என்று வெறும் எண்ணிக்கை அல்ல அங்கு 125 குடும்பங்கள்மொத்தமாகவே பாதிப்படைந்துள்ளது. அதனை நம்பி வாழ்வாதரத்தை சீர்படுத்திகொண்டவர்கள் வேலை செய்தவர்கள் என பார்க்கும் போது அங்கு இழப்பு என்பதுஎத்தகையது என்பது புரியும்.
இங்கு பரவிய தீ அணைக்க ஏற்பட்ட காலதாமதம் குறைக்கப்பட்டிருந்தால் அதி விரைவில் தீயை அணைக்க செயல் பட்டிருந்தால் இழப்பை பாதிக்கு மேல் குறைத்திருக்கலாம்.
யாழில் இருந்து அல்லது வவுனியாவில் இருந்து தீயணைப்பு வண்டிகள் கொண்டுவரப்படும் போது தீ சந்தைத் தொகுதியை மட்டுமல்ல கிளிநொச்சியையே அழித்துவிடும் அளவிற்கு பரவி விடும் என்பதும் அறிந்த விடயமே.
மேலும் தீ பரவிய கடைகளின் உள்ளே இருந்து பொருட்களை வெளியே கொண்டு வந்து பல இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு மேல் இராணுவ நீர்த்தாங்கி வாகனங்கள் ஏறி கடந்து சென்ற நிலையில் அவையும் விற்பனைக்கு உதவாத நிலையில் சேதமடைந்துள்ளன.
இவற்றை தொகுத்து நோக்கும் போது கிளிநொச்சி மக்கள் இழப்பை சந்திக்க அரசும்இராணுவம் வேண்டும் என்றே தீயை பரவவிட்டு வேடிக்கை பார்த்து இழப்பைஅதிகரிக்க எடுத்த நடவடிக்கை என்றும், தீ கூட அவர்களாலே பற்றவைக்கப்பட்டுஇருக்கலாம் என்ற ஐயம் தோன்றுவதாக அவதானிகள் கருத்துகள் வெளியிட்டுவருகின்றனர்.
மேலும் நட்டஈடு எனும் ரீதியில் பார்க்கும் போது 100ற்கு 10 வீதமானது கூடஅம்மக்களுக்கு சென்றடையாது என்பதும் உறுதி. ஒரு காலத்தில் பிச்சைக்காரர்களுக்கும் வாழ்வாதாரமளித்து வந்த மக்கள் வாழ்ந்த கிளிநொச்சி மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றி கையேந்தும் நிலையை ஏற்படுத்தியது அப்போதைய இப்போதைய தலைவர்களும் இராணுவமே என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முழு நாடும் அபிவிருத்தி, ஒற்றுமை, அனைவரும் ஒரு தாய் மக்கள், நல்லிணக்கம்என்பன பெயர் அளவில் மட்டும் காணப்பட்டு வந்தால் போதாது அவை முறையாகநடைபெற வேண்டும் அப்போதே முழு நாட்டின் மக்களும் நிம்மதிமிக்க வாழ்வைவாழ்வார்கள்.
பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் பாதிப்படைந்த மக்களுக்கு உரிய நிவாரணங்களைவழங்க வேண்டும், தெற்கிற்கு ஒரு நீதி வடக்கிற்கு ஒரு நீதி என பாகுபாடு அற்றவகையில் செயற்பட்டு ஏற்கனவே பாதிப்படைந்து நிர்க்கதியான மக்களை மேலும்துன்பப்படுத்தி அழிக்க நினைக்காமல் உரிய செயற்பாடுகளை உடனுக்குடன்நிறைவேற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பிரதேச சபைகளை நகர சபைகளாக மாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்த செயற்பாடுகளை கடந்த அரசின் மூலம் தடுக்கப்பட்டது அப்போது அது நிறைவேறியிருந்தால் தற்போது இத்தகைய சேதமும் அதிகரித்திருக்காது.
தற்போதைய அரசு அவற்றை நிவர்த்தி செய்து முறையான செயற்திட்டங்களை மேற்கொள்ளுமா? மக்கள் பிரதிநிதிகள் அவற்றிற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பார்களா? வடக்கு மக்களின் நிலை மாறுமா என்பவை கேள்விக்குறியாகவே உள்ளது.