வடக்கு நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நன்னீர் மீன்பிடியாளர்கள் சங்கங்களின் உறுப்பினர்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் நோக்கோடு அவர்களுக்கான பெரிய மற்றும் சிறிய ஓடங்கள், நன்னீர் மீன்பிடி மானிய வலைகள், உயிர் காப்பு அங்கிகள் போன்ற உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 05-04-2016 செவ்வாய் மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் காரியாலயத்தில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது விசேட அழைப்பின் பேரில் வடக்கு ஆளுநர் கௌரவ ரெஜினோல்ட் குறே அவர்கள் கலந்துகொண்டார், அவரோடு அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் ஆளுநரின் செயலாளர் திரு.எல்.இளங்கோவன் அவர்களும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் விரிவாக்கல் பணிப்பாளர் திருமதி.கே.பி.புஷ்பலதா அவர்களும், அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுறேந்திரனாதன் அவர்களும் வீதி அபிவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் அதிகாரி திரு.என்.சலீவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இன் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த
01 – தண்ணீர் முறிப்பு நன்னீர் மீனவர் அமைப்பு.
02 – தென்னியங்குளம் நன்னீர் மீனவர் அமைப்பு.
03 – விசுவமடு முறிப்பு நன்னீர் மீனவர் அமைப்பு.
04 – முத்தையன்கட்டு நன்னீர் மீனவர் அமைப்பு.
05 – வவுனிக்குளம் நன்னீர் மீனவர் அமைப்பு.
06 – மதவாளசிங்கம் குள நன்னீர் மீனவர் அமைப்பு.
07 – உடயார்கட்டுக் குள நன்னீர் மீனவர் அமைப்பு.
ஆகியவற்றிற்க்கும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த
01 – அக்கராயன் குளம் நன்னீர் மீனவர் அமைப்பு.
02 – வன்னேரிக் குளம் நன்னீர் மீனவர் அமைப்பு.
03 – கரியாலை நாகபடுவான் குளம் நன்னீர் மீனவர் அமைப்பு.
04 – புது முறிப்புக் குளம் நன்னீர் மீனவர் அமைப்பு.
05 – ஆனைவிழுந்தான் குளம் நன்னீர் மீனவர் அமைப்பு.
06 – இரணைமடுக் குளம் நன்னீர் மீனவர் அமைப்பு.
07 – வெலி ஓயாக் குளம் நன்னீர் மீனவர் அமைப்பு.
ஆகிய 14 பதிவுசெய்யப்பட்ட நன்னீர் மீனவர் சங்கங்களுக்கும் சிறிய, பெரிய புதிய ஒடங்களும், புனரமைப்பு செய்யப்பட்ட பாவித்த ஒடங்களும், மானிய அடிப்படையிலான மீன்பிடி வலைகளும், உயிர்காக்கும் அங்கிகள் போன்ற உபகரணங்கள் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சால் சுமார் 2.87 மில்லியன் செலவில் வழங்கப்பட்டது இத்திட்டத்தினை கிளிநொச்சி மாவட்ட பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் அலுவலகம் நெறிப்படுத்தி ஆய்வு செய்து வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





