கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு புலம்பெயர் உறவான எஸ்.கே. நாதன் நிதியுதவி

286

கிளிநொச்சி சந்தைக் கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் 25 பேருக்கு புலம்பெயர் உறவான எஸ். நாதன், நிதியுதவி வழங்கியுள்ளார்.

சுவிஸில் வசிக்கும் புலம்பெயர் உறவான, எஸ்.கே. அறிவுச் சோலை சிறுவர் இல்ல உரிமையாளர் எஸ்.கே.நாதன், கிளிநொச்சி பழக்கடை வர்த்தகர்கள் 23 பேருக்கு தலா பதினைந்தாயிரம் ரூபா வழங்கியுள்ளார்.

நேற்று காலை குறித்த இருபத்தைந்து வர்த்தகர்களுக்கும் இவ்வாறு நிதியுதவி வழங்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கிளிநொச்சி சந்தைக் கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடைகளை இழந்த வர்த்தகர்களுக்கு அவர்களது தொழில்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முதற்கட்ட உதவிகளை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கமையவே கிளிநொச்சி பழக்கடை வர்த்தகர்கள் 23 பேருக்கு நேற்று எஸ்.கே. நாதன் என்பவரால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சந்தை வளாகத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், கரச்சி பிரதேச சபைச் செயலாளர் கம்சநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர், சந்தை வர்த்தகச் சங்கத்தினரால் இப்பணம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
sknathan1

sknathan2

sknathan3

sknathan4

sknathan5

SHARE