கிளிநொச்சி முறிகண்டி ஊடாக அக்கராயன் பிரதேசத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் இராணுவ பயிற்சி இடம்பெறுவதால், அப்பிரதேச மக்கள் அச்சத்தில் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பிரதேசத்தை அண்மித்த பிரதேசங்களான பொன்னகர், அமைதிபுரம் ஆகிய கிராம மக்களே இவ்வாறு அச்சத்தில் உறைந்துள்ளதோடு, வீதியில் இவ்வாறு பயிற்சியில ஈடுபடுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பிரதேசத்தில் கட்டாக்காலிகளாக திரியும் மாடுகளும் அதிகளவில் வீதியில் உலாவுவதால் மக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மழை காலத்தில் அக்கராயன் குளம் நிரம்பி வான் பாய்வதால், வீதியில் நீர் நிரம்பி மக்கள் சொல்லொணாத் துயரை அனுபவித்து வரும் நிலையில், தற்போது இராணுவ பயிற்சியும் இடம்பெறுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து கவனஞ்செலுத்த வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.