கிழக்கில் தொப்பிபிரட்டி ஸ்ரீ லங்காவின் முக்கிய அமைச்சரும் மகனும் அதிரடி கைது!

145

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் இன்று காலை வாழைச்சேனைப் பொலீசார் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டமைக்கு அமைய குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன் அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்வாறு கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த காவல்துறைமா அதிபரூடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில் செய்த முறைபாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

இன்று கைது செய்யப்பட்ட வீதி அபிவிருத்தி பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் உட்பட 4 பேர் இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், 25 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல வாழைச்சேனை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இன்றைய(19) தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் உள்ளிட்ட நால்வரின் கைது மற்றும் அதன் பின்னர் அவர்களை நீதிமன்றத்திற்குள் ஆஜர்படுத்திய சம்பவம் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தமை போன்ற சம்பவங்கள் அனைத்தையும் ஊடகங்களின் கண்ணில் மண்ணைதத் தூவி அவர்களது புகைப்படங்களோ அல்லது வீடியோ காட்சிகளோ வெளிவராத வண்ணம் கனகச்சிதமாக அனைத்து தரப்பினரும் செயற்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலீசாருக்கு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்ட போதும் அதனை அவர்கள் செய்யாது சட்டத்தரணி ஊடாக நேரடியாக நிதிமன்றத்திற்கு செல்வதற்கு பொலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் உள்ளிட்ட நால்வரும் பிணையில் விடுதலை செய்யப்படவுடன் அவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்து சட்டத்தரணிகளின் வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊடகங்களுக்கு தெரியாதவாறு வெளியேறிச் சென்றுள்ளனர்.

சாதாரண குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படும் நபர்களையெல்லாம் ஊடகங்களை அழைத்து கருத்துக்கூறும் பொலீசர் இந்த விடயத்தை ஊடகங்களில் வராதவாறு பார்த்துக்கொண்டனர்.

நீதிமன்ற வளாகத்திற்குள் ஊடகங்களளை வரக்கூடாது என்று கூறும் பொலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்களை மட்டும் நீதிமன்றத்தின் வாயிலில் இருந்து வாகனத்தில் ஏற்றிச் செல்ல அனுமதித்தது எவ்வாறு?

இவர்களின் கைது குறித்து அமைச்சரின் சட்டத்தரணிகள் கூட ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

இதனால் நீதிமன்றத்திற்கு முன்னால் செய்தி சேகரிப்பதற்காக குவிந்திருந்த ஊடகவியலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

இந்த நாட்டின் பிரதமர் கூட நீதிமன்றத்திற்குள் செல்லும்போது தங்களது வாகனங்களை நீதிமன்றத்திற்கு வெளியில் விட்டுவிட்டு நடந்து செல்லும்போது ஒரு அமைச்சர் நீதிமன்றத்திற்குள் வாகனத்தில் சென்று இறங்கியமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டமைக்கு அமைய குறித்த இருவரும் வாழைச்சேனைப் பொலீசாரினால் கைது செய்யப்பட்டு இன்று வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 25 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல வாழைச்சேனை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன் அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்வாறு கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த காவல்துறைமா அதிபரூடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில் செய்த முறைபாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE