கிழக்கில் சம்பூர் அனல் மின்நிலைய அமைப்பிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்

284

சம்பூர் – திருகோணமலை மக்கள் கிழக்கு மாகாண சபை முன்பாக அனல் மின் நிலைய அமைவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள். குறித்த போராட்டத்தை பசுமைத் திருகோணமலை அமைப்பு இன்று (26) ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் திரு.நாகேஸ்வரன் இன்றைய அமர்வில் சம்பூர் அனல் மின் நிலைய அமைவிற்கு எதிராக தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார் என்று தெரிவித்ததோடு, இந்தப் பிரேரணைக்கு மற்றைய உறுப்பினர்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு வருகைத் தந்த மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஆவணக் கையேடும் ஏற்பாட்டாளர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் மக்கள் மற்றும் தமிழ் மக்கள் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE