“கிழக்கில் முதலிடுவோம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் சர்வதேச மாநாடு

298

“கிழக்கில் முதலிடுவோம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பு கலதாரி ஹோட்டலில்ஈ சர்வதேச மாநாடு கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் தலைமையில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கிழக்கின் முதலீட்டு அரங்கு மாநாட்டுக்கு நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சவூதி அரேபியா இளவரசர் எச்.ஆர்.எச்.பிரின்ஸ் அப்துல் அஸீஸ் அல் சவூத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதீயுதீன், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெணான்டோ, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பங்களாதேஸ், கட்டார், ஓமான், கனடா, லண்டன், இந்தியா, பாக்கிஸ்தான், மாலைதீவு போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் ஹாபிஸ் நஸீர் அஹமட் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கை நாட்டின் மீது அக்கரை கொண்டுள்ள சர்வேதவ முதலீட்டார்களும், சர்வேதச முதலீட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களும், பணம் படைத்த முதலீட்டார்களுடன் கொழும்புக்கு வெளியே உள்ள உள்ளூர் முதலீட்டார்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்கள். இந்த மாநாட்டுக்கு சர்வதேச வர்த்தக அமைச்சு, இலங்கை முதலீட்டாளர்கள் சபை ஆகியன இணைந்து இந்த முயற்சிக்கு பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கி இருந்ததுள்ளனர். அத்துடன் இந்த மாநாட்டின் நிகழ்வுகள் நாளையும் இடம்பெறவுள்ளத.

என கூறியுள்ளார்.

SHARE