கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் இன்று காலை சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

255

கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் இன்று காலை சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதனால் குறித்த பகுதியில் சற்று பதற்ற நிலை காணப்படுகின்றது.

மேலும் இது தொடர்பாக தெரிய வருவதாவது,

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த தினங்களில் 28 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்தனர். இதை கண்டிக்கும் விதமாகவே குறித்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (11)

இன்று காலை ஒன்று கூடிய மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் (செனட்) முன்பாக ஒன்றுகூடி ஒலிவாங்கியினூடாக பலத்த கோஷங்களை எழுப்பியுள்ளனர். கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இதை நிறுத்துமாறு கூறியும் அதை கணக்கில் கொள்ளாமல் அவர்கள் தொடர்ந்தும் கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (12) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (13)

 

இதனையடுத்து குறித்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கள மாணவர்களில் சிலரை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அழைத்து பேச்சுவார்த்தையை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (14) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (15)

 

மேலும், தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்கள், உபவேந்தர் கட்டிடத் தொகுதிக்குள் தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

SHARE