கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக கலாநிதி ஜெயசிங்கம்

214

கிழக்கு பல்கலைக்கழக பேரவை கலாநிதி ஜெயசிங்கத்தை உபவேந்தராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு சிபார்சு செய்திருந்தது. இதற்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு செங்கலடியை சேர்ந்த கலாநிதி ஜெயசிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்திலும் பின்னர் இங்கிலாந்து நோர்த் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலும் பட்டபடிப்பை முடித்திருந்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றிய கலாநிதி ஜெயசிங்கம் சிறந்த சமூக சேவையாளருமாகும்.

1990ஆம் ஆண்டு யூன் மாதம் மீண்டும் யுத்தம் ஆரம்பித்த வேளையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட அகதிகள் தஞ்சமடைந்தனர். நெருக்கடியான அக்கால கட்டத்தில் அந்த அகதி முகாமை பராமரித்து மக்களை பாதுகாத்த பெரும் பணியினை பேராசிரியர் மனோ சபாரத்தினம், வைத்தியகலாநிதி சிவலிங்கம், கலாநிதி ஜெயசிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி 165க்கு மேற்பட்டவர்களை இராணுவத்தினரும் புளொட் ஒட்டுக்குழுவினரும் கடத்தி சென்று படுகொலை செய்த சம்பவத்தின் சாட்சியாக இன்றும் உயிருடன் இருக்கும் ஒருவர் கலாநிதி ஜெயசிங்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

jajasengam

SHARE