கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கு இடையூறு: த.தே.கூ கண்டனம்

249

மட்டக்களப்பு – வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உரையாற்றும் போது அவருக்கு இடையூறு விளைவித்து குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

download

குறித்த நிகழ்வில் அவர் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, நபரொருவரால் இடையூறு செய்து வன்முறை ஏற்படும் வண்ணம் நடந்துகொண்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் எமது ஆதரவாளர்களை உணர்ச்சிவசப்படுத்தி அவர்களை தவறான பாதைக்கு திசைதிருப்பலாம் என தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதே5வளை, இதுபோன்ற விபரீதமான செயற்பாடுகளுக்கு வழிகோல வேண்டாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

SHARE