நவராத்திரி விழாவினை சிறப்பிக்கும் வகையில் நாடெங்கிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களிலும் இன்று காலை நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நவராத்தி விழா மட்டக்களப்பில் சிறப்பாக மிக சிறப்பாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வு மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் உள்ள பாலர் பாடசாலை பணியகத்தில் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பில் உள்ள பாலர் பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து பணியகத்தில் வைக்கப்பட்டிருந்த சரஸ்வதி தேவி உட்பட முப்பெரும் தேவிகளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் பணியகத்தின் உத்தியோகத்தர்கள்,பாலர் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் உட்பட பெருமளவானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.