
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீட் அஹமட் தனது நல்ல நண்பர் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
எனினும், சம்பூர் கடற்படை அதிகாரி ஒருவரை இழிவாக பேசிய சம்பவத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் நேற்றைய தினம் சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை பார்த்ததன் பின்னர் தாம் கிழக்கு மாகாண முதலமச்சருக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து, இது பற்றி பேசியதாகத் தெரிவித்துள்ளார்.
இன்னும் பொறுமையுடன் செயற்பட்டிருக்க வேண்டுமென தாம் முதலமைச்சரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் திட்டப்பட்ட போதிலும் மிகுந்த ஒழுக்கத்தை கடைபிடித்த கடற்படை கப்டேன் பிரேரட்னவின் செயற்பாடு பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடா்பில் முதலமைச்சர் அஹமட் பகிரங்கமாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ மன்னிப்பு கோருவதில் எவ்வித பிழையையும் தாம் காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.