கிழக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் – ஹக்கீம்

225
கிழக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஹக்கீம்:-

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்பூர் மஹா வித்தியாலத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது கடற்படை உயர் அதிகாரியை திட்டியமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

உயர் படையதிகாரி ஒருவரை திட்டுவதனை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடற்படை அதிகாரியை திட்டியமை குறித்து முதலமைச்சருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

கடந்த 20ம் திகதி சம்பூர் கடற்படை முகாமின் கட்டளைத் தளபதி கப்டன் ரஞ்சித் பிரேமரட்னவை, பகிரங்கமாக கிழக்கு முதலமைச்சர் அஹமட் கடுமையாக திட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

SHARE