கிழக்கு முதலமைச்சர் – கடற்படை அதிகாரி இரு தரப்பிடமும் அறிக்கை கோரும் பிரதமர்

242

ranil_2334023f

கிழக்கு மாகாண முதலமச்சர் நசீட் அஹமட் மற்றும் கடற்படை அதிகாரி பிரேமரட்ன ஆகிய இரு தரப்புக்களிடமிருந்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிக்கை கோரியுள்ளார்.

திருகோணமலை சம்பூர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு வைபவம் ஒன்றில் முதலமைச்சர் நசீட், கடற்படை உயர் அதிகாரியை தூற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கடற்படையினர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இதேபோன்று முதலமைச்சர் தரப்பு நியாயங்களை உள்ளடக்கிய வகையிலான விளக்கம் அடங்கிய அறிக்கையையும் பிரதமர் கோரியுள்hளர்.

இரண்டு தரப்பினரதும் அறிக்கைகளை சீர்தூக்கிப் பார்த்து இந்த அறிக்கைகள் ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் அவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண முதலமச்சர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு பிரதமரும் ஜனாதிபதியும் கூட்டாக இணைந்து பேசி தீர்மானம் ஒன்றை எடுப்பார்கள் என பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE