கீரிமலையில் அமையவுள்ள சுகாதார திடக்கழிவு நிலநிரப்புத் திட்டம்!

225

யாழ். குடாநாட்டில் அன்றாடம் மலைபோல் குவியும் திண்மக் கழிவுகளின் பிரச்சினைகளுக்குக் கீரிமலையில் அமையவுள்ள நிலநிரப்புத் திட்டம் ஒரு தீர்வாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என வட மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கீரிமலையில் சுண்ணாம்புக்கல் அகழ்வால் ஏற்பட்டிருக்கும் பாரிய குழியைக்கொண்ட பிரதேசத்தில் சுகாதாரமான திடக்கழிவு நிலநிரப்புத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ். பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (9)

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

பிரதேச சபைகளின் ஊடாகச் சேகரிக்கும் திண்மக் கழிவுகளில் இருந்து உக்கக்கூடிய கழிவுகளும், மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்ரிக் கழிவுகளும் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் எஞ்சிய திடக்கழிவுகளே கீரிமலைக் குழியில் நிரப்பப்பட உள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (7)

தினமும் 50 தொன் கழிவுகள் என்ற அடிப்படையில் 15 வருடங்களில் இந் நிலநிரப்புத்திட்டம் முடிவுக்கு வரும்.

கழிவுகளினால் நிலத்தடிநீர் மாசடையாமல் இருப்பதற்காகக் கற்குழியின் அடிப்பகுதியில் செயற்கைத் தரைவிரிப்பு மற்றும் பென்ரோனைற் களியினால் மூன்று அடுக்குகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (12)

இத்திட்டத்துக்கு கொரிய அரசாங்கம் 34 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், இலங்கை அரசாங்கம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்க உள்ளது.

2018ஆம் ஆண்டின் இறுதியில் இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (13)

SHARE